

திட்டக்குடி அருகே சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதி 30 ஆடுகள் பலியாயின.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சித்தூர் அருகே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தை பாலாறு மகன் முருகேசன் (வயது 50). இவர் நூறு செம்மறி ஆடுகளுக்கு மேல் மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு செல்லும் போது அதிகாலை கொரக்கவாடி கிராமத்தை லெட்சுமணன் மகன் கார்த்திக் (28) ஜல்லி ஏற்றிக் கொண்டு கொரக்கவாடி நோக்கி செல்லும் போது டிப்பர் லாரி ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்து சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவிடத்திலேயே 30 ஆடுகள் பலி. 20க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த ராமநத்தம் போலீஸ் டிப்பர் லாரி ஓட்டுநர் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



