


சிறுப்பாக்கம் பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் முறையாக பதில் கூற மறுத்து வருவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், ஒரு சில இடங்களில் நெல் அறுவடை செய்யும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வெளியூருக்கு சென்று நெற்கதிர்களை விற்பனை செய்வதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வருடம் தோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து பயனடைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு திறக்கப்படாமல் பூட்டி கிடப்பதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் கூற மறுத்து வருவதாகவும், விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வேலன் துறை அதிகாரிகள் பார்வையிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

