• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு..!

ByA.Tamilselvan

Jan 18, 2023

மேகாலயா,திரிபுரா,நாகாலாந்து சட்டபேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியும், நாகாலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிகிறது. இதனையடுத்து மூன்று மாநிலங்களுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மேகலாயா சட்டப்பேரவை, நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 மாநில தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.