அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் அமுதப்பெருவிழாவாக உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்அதனை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்தார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.1.7.2022 முதல் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என அறிவித்தார்.