• Fri. Apr 26th, 2024

25 பள்ளி மாணவர்கள் கடத்தல் பீதி பீதியில் வேனிலிருந்து குதித்த மாணவர்கள்….

Byadmin

Jul 23, 2021

தங்களை கடத்திவிட்டதாக மினிவேன் ஆட்டோட்வில் இருந்த குதித்த பள்ளி மாணவர்கள் படுகாயம். பிள்ளைகளை கடத்தவில்லை என ஓட்டுநர் விளக்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில் மாணவர்களுக்கு முட்டை பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டதால் உசிலம்பட்டியை சேர்ந்த 25 மாணவர்கள் பள்ளி சென்றுள்ளனர். அங்கு முட்டை உள்ளிட்ட பொருள்களை வாங்கி கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள் அந்த வழியாக வந்த மினிலோடு வேனை தடுத்து நிறுத்தி மாணவர்களை அருகில் இருக்கும் உசிலம்பட்டி கிராமத்தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர். 25 பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு மினிலோடு வேன் சென்றுள்ளது. உசிலம்பட்டி கிராமத்தில் வேன் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தையும் தாண்டி வேன் சென்றதால் பதற்றமடைத்த ஐந்து மாணவர்கள் வேனில் இருந்து குதித்து உள்ளனர். இதில் மாரிமுத்த(13) ரம்யா (13) சரண்யா(13) சசிரேகா(13) கலைவாணி (12) ஆகிய மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வேன் ஒட்டுநர் ராஜசேகரன்(36) நான் பிள்ளைகளை கடத்தவில்லை என்றும் 25 பிள்ளைகளை ஏற்றி வரும் போதும் எப்படி நான் கடத்துவேன் வேனை நிறுத்தவதற்குள் பிள்ளைகள் குதித்துவிட்டதாகவும் நான் தான் 108 க்கு போன் செய்து பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறுகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *