மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.
மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூபாய் 110 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது.மதுரை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூபாய் 85 கோடி செலவிலும் 5 அடுக்கு மாடிகள் கொண்ட புதிய அலுவலகம். கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதேபோல் மதுரை விமான நிலையத்தில் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் சுமார் புதிதாக கையகப்படுத்தப்பட்ட இடங்களில சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளும் வரும் அடுத்த (2024)ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் கூறினார் .மேலும் விமான நிலைய ஓடு பாதை விரிவாக பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதியாக உள்ள ஈச்சனேரி கிராம பகுதியில் 2% சத இடத்தில் ரன் வே ஒடுபாதை அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் விரைவில் பணிகள் துவங்கும் என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் வரும் ஏப்பரல் மாதம் முதல் இரவு நேர சேவை துவக்கப்படுகிறது.இதற்காக மதுரை விமான நிலையத்திற்கு புதிய விமான சேவைகள் கொண்டுவரவும். பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்