• Fri. Mar 29th, 2024

கொரோனா ஊரடங்கில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு: ஷாக் ரிப்போர்ட்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் கொரோனா முதல் முழு ஊரடங்கின்போது 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் ஆண்கள். 7 லட்சம் பெண்கள் வேலையை பறி கொடுத்துள்ளனர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தன.
உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட 9 துறைகளின் புள்ளி விவரங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இந்த 9 துறைகளில் முதல் முழு ஊரடங்குக்கு முன்பு (25 மார்ச் 2020) ஆண் ஊழியர்களின் எண்ணிக்கை 2.17 கோடியாக இருந்தது. ஜூலை 1-ந் தேதி 2.01 கோடியாக குறைந்துள்ளது. பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 லட்சம் குறைந்து 90 லட் சத்தில் இருந்து 83.3 லட்சமாக இருக்கிறது.

நாட்டை தன்னிறைவு அடைய செய்வதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் பல்வேறு நீண்டகால திட்டங்கள், கொள்கைகள் உள்ளடக்கிய ஆத்ம நிர்பர் பாரத் நிதி தொகுப்பின் ஒரு பகுதியாக ரூ.27 லட்சம் கோடிக்கு அதிகமாக நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *