• Thu. May 2nd, 2024

பல்லடம் அருகே 23 லட்சத்தி 40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.., தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

ByS.Navinsanjai

Apr 3, 2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரிச்சல் பகுதியில் துணி நூல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதடையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். .அப்போது அவ்வழியே வந்த ஆடி சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 23 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் உரிய ஆவணங்கள
ளின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரொக்கத்தை பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு வந்த வருமான வரித்துறையினர் தகுந்த ஆவணங்கள் இல்லை என தெரிவித்ததை, தொடர்ந்து பணத்தை பல்லடம் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரொக்கம் கொண்டு வந்த நபர்கள் மயில்சாமி மற்றும் சக்திவேல் என்பதும் அவர்கள் புத்தரிச்சலில் உள்ள எஸ் ஆர் எஸ் கண்ட்ரி சிக்கன் என்ற நிறுவனத்திலிருந்து 23 லட்சத்து 40 பணத்தை பல்லடத்திலுள்ள தனியார் வங்கியில் வரவு வைக்க கொண்டு வந்ததாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே ரூ 23 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *