• Thu. Mar 27th, 2025

அமைச்சர் மனோ தங்கராஜ்; விஜய்வசந்த்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காங்கிரஸ் திமுக இந்திய கூட்டணி கட்சி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த்திற்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பேசினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் காங்கிரஸ் செய்த சாதனைகளை எடுத்து கூறியும் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் பாசிச பாஜக ஆட்சியை வீழ்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பேசினார்.
இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.