• Fri. May 3rd, 2024

குமரி இரணியில் தாமரைக்கு வாக்கு கேட்ட ஜி.கே.வாசன்

கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக 10_வது முறையாக பாஜக வேட்பாளராக போட்டியிடும். பொன். இரதாகிருஷ்ணனை ஆதரித்து இரணியல் சந்திப்பில் .த மா கா தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் உடன் இந்த நிகழ்வில் அண்மையில் பாஜகவில் இணைந்த விஜயதரணியும் பிரச்சார வாகனத்தில் நின்றார்.

பொன். இராதாகிருஷ்ணன் இரண்டு முறை மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்த போது, குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள், அதில் பணி முடிந்த திட்டங்களை எல்லாம் ஜி.கே. வாசன் பட்டியல் இட்டு தாமரை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார் .

தொடர்ந்து அவர் தெரிவித்தவைகள்.

திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமை தொகை என காலையில் மகளிர்களிடம் கொடுக்கும் தொகை, மாலையில் டாஸ்மாக் கல்லாவுக்கு வந்து விடுகிறது. திமுக வித்தியாசமான முறையில் கல்லா கட்டுகிறது.

திமுக அரசு கல்வியில் அரசியலை புகுத்துக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசு,மக்களை ஏமாற்றும் அரசான இந்த ஆட்சியில், விலைவாசி உயர்ந்துள்ளது. சொத்து வரி, மின்கட்டணம், தண்ணீர் வரி,பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளது.

மீனவர்களுக்கு துணை நிற்பது பாஜக அரசு. மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்க வேண்டும், இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் கிடையாது என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *