குமரி மலைவாழ்மக்கள், சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டம் கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை , திருவரம்பு பகுதிகளில் செயல்பட்டுவரும் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார் குறிப்பாக மலைவாழ்மக்களின் கிராம்பு,நல்லமிளகு,புளி மற்றும் சோப்பு தயாரிப்புகளை ஆர்வமுடன் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அதன் தரம் மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார் இதேபோல் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களுக்கு வழங்கபட்டூவரும் பை தயாரிப்பு பயிற்சியையும் பார்வையிட்டார் அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில்
மாவட்டத்தில் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதில் சிறந்த குழுக்களை தேர்தெடுத்து அடுத்த கட்டத்தில் எவ்வாறு வளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பது குறித்த திட்டம் தயாரிக்கவுள்ளோம். மேலும் பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கபடும் பொருட்களை மற்றும் அவர்களது பாரம்பரிய உணவு வகைகளை சுற்றுலாதலங்களில், குறிப்பாக சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் சிறுகடைகள் அமைக்கபட்டு விற்பனையை மேற்படுத்தவும் ஆன்லைன் முறையில் தனியாக போர்டல் ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிடபட்டுள்ளது மேலும் மலைவாழ்மக்களின் உணவுவகைகளை வெளிகொண்டு வரும் விதமாகவும் விற்பனையை அதிகரிக்கவும் மாவட்டத்தின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் விற்பனை மையம் அமைக்கபடும். குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழைபொழிவதால் வெப்பதாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகள் கல்வி திட்டங்களுக்கேற்ப வகுப்புகள் நடத்தலாம் எனவும் ஆட்சியர் ஸ்ரீதர் கூறினார்.