மருத்துவம் சார்ந்த நர்சிங் படிப்புகளுக்கு வரும் 21ம் தேதி கவன்சிலிங் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவம் சார்ந்த பி.பார்ம்., நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு 21-ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, கோவையில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் முக கவசம் கட்டாயம் அணிவதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.