• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ByA.Tamilselvan

Sep 6, 2022

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் 2பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.