• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே, முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

ByKalamegam Viswanathan

Mar 31, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள வெம்பக்கோட்டை – வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், காட்டு முயல்களை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் தலைமையில், வனத்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையம் அருகேயுள் சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி (30), மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் (32) ஆகிய இருவரும் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரிந்தது. வனத்துறை அலுவலர் பூவேந்தன், முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட 2 முயல்களை வனத்துறை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். முயல்களை வேட்டையாடிய ராமசாமி மற்றும் மதியழகன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.