• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தீ பாதுகாப்பு குறித்த 2நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Oct 12, 2025

தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், நடைபெற்றது.

தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து எடுத்துரைத்தனர். கார்களில் திடீரென தீப்பிடித்தால், அதை அணைப்பதற்கு காரிலேயே ஒரு சிறிய தீயணைப்பு கருவியை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர்களில் கேஸ் கசிவு இருந்தால், அதை அறிந்து மின்விளக்கு போடக்கூடாது. சிலிண்டரில் ரெகுலேட்டரை அணைத்து விட்டு, அதை தனியாக எடுத்து விட்டு, மூடியால் மூட வேண்டும். அதன் பின், சம்பந்தப்பட்ட கேஸ் எஜன்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனக் கூறினார்

தீயணைப்பு வீரர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றுகின்றனர்.மீட்பு பணிகளில் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.

நியூயார்க் இரட்டை கோபுரத்தில் பின்லேடன் தாக்குதல் நடத்திய போது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்தனர்.

விலங்குகள் கிணற்றில் தவறி விழுந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கி கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது மட்டுமே தீயணைப்பு வீரர்களின் தலையாய கடமையாகும்.என கூறினார்.

நீர்நிலைகளில் படகுகள், பரிசல்களில் பயணித்தால், உயிர் காக்கும் உடைகளை அணிய, அறிவுறுத்தினர். ‘வாங்க கற்றுக்கொள்வோம்’ என்ற தலைப்பில், தீ தடுப்பு, பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய வளாகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன அதனை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

உபகரணங்கள் பயன்படுத்துவது குறித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கி கூறினார்கள்.