மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 19 வது சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பீஸ் நிக்காஹ் திருமண தகவல் மையத்தின் நிறுவனரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்களின் தலைமையில் கே. புதூர் வட்டார உலாமா பைரோஸ்கான் முன்னிலையில் நடைபெற்ற இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் 100 மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர். இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் கலந்துகொண்டு, 2 வீட்டாரின் சம்மதத்தோடு வரன் முடிவு செய்துள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமண தகவல் மையத்தின் நிறுவனர் கூறுகையில்..,
இந்த திருமண தகவல் மையத்தின் 19வதுசுயம் அறம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த சுயம்வரம் நிகழ்ச்சியின் நோக்கமானது வரதட்சணை கொடுமையால் பல திருமணங்கள் தடைபட்டு விடுகிறது. இதனை போக்கும் விதமாக 100 மணமக்களுக்கு வரதட்சணை இல்லாமல் திருமணம் நடத்த திட்டமிட்டு இன்று சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நமது நிறுவனத்தின் மூலம்12,000 ற்கு மேல் திருமணங்கள் வரதட்சணை இல்லாமல் நடத்தி முடிந்துள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் வரதட்சணை இல்லாமல் திருமணம் மட்டுமின்றி ஏழை எளிய கணவனை இழந்த பெண்களுக்கு தமிழ் உருது முஸ்லிம் பெண்களுக்கும் மறுமணம் செய்து வைத்தல் மற்றும் திருமணம் நடைபெறாமல் இருக்கும் பெண்களுக்கு நிவாரண உதவி வழங்குதல் மற்றும் இந்த ஆண்டு 2024 இறுதிக்குள் 20 ஆயிரம் திருமணம் நடத்தி வைக்க இலக்கு இலக்காகக் கொண்டுள்ளது என கூறினார்.