• Mon. Mar 20th, 2023

17.53 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

Byகாயத்ரி

Jan 3, 2022

புகார்களின் அடிப்படையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக வாட்ஸ்அப் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, பொய் செய்திகள் மற்றும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் தகவல்களை சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் சமூக வலைதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘பல காரணங்களுக்காக 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் 95 சதவீதம் வணிக ரீதியில் மொத்தமாக தகவல்களை பரிமாறுவதாகவே உள்ளன.

இதைத் தவிர, பல புகார் அடிப்படையில் விசாரணை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் இவ்வாறு 20 லட்சம் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *