• Wed. Dec 11th, 2024

ஆப்பிள் வாட்ச்-ன் புதிய விளம்பர வீடியோ

Byகாயத்ரி

Jan 3, 2022

ஆப்பிள் நிறுவனம் 911 தலைப்பில் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கான புதிய விளம்பர வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. விளம்பர வீடியோ ஆப்பிள் வாட்ச் அதன் பயனர்களின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்டுள்ளதை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வீடியோவில் அமாண்டா, ஜேசன் மற்றும் ஜிம் என மூன்று பேர் ஆப்பிள் வாட்ச் மாடலில் இருந்து 911 அழைத்து உதவி கோர முடிகிறது. முதல் சம்பவத்தில் பெண் பயணித்து கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கும் போது ஆப்பிள் வாட்ச் உதவுகிறது. மற்றொரு சம்பவத்தில் சூறாவளி காற்றில் சிக்கிய நபர் கடலுக்குள் தூக்கி வீசப்படுகிறார். அடுத்ததாக 21 அடி உயரத்தில் இருந்து விவசாயி கீழே விழுந்து காலை உடைத்து கொள்கிறார். வீடியோ நிறைவடையும் போது மூன்று பேரும் நிமிடங்களில் காப்பாற்றப்படுகின்றனர்.அதன்படி ஆப்பிள் வாட்ச் வாங்கினால், ஆபத்து காலத்தில் அது உங்களின் உயிரை காப்பாற்றும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றி இருக்கும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.