
மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் இந்திய மீன் வள மசோதா 2021-ஐ கைவிட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தங்களின் வலைகள், தூண்டில் ,படகுகளை ஒப்படைக்கும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசாரின் அனுமதி மறுக்கப்பட்ட பின்பு மனு அளித்தனர்.
மீன் வளத்தை பாதுகாப்பது என்ற பெயரில் மீனவர்களின் மரபு உரிமையான மீன்பிடித் தொழிலுக்கு இந்திய மீன்வள மசோதா 2021 சட்டம் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் இந்தியாவில் மீன்பிடித்தல் மற்றும் மீன் வளர்த்தல் தொழிலில் 16 மில்லியன் மீனவர்கள் நேரடியாகவும், இதில் இரண்டு மடங்கு மக்கள் மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் மீன் ஏற்றுமதியின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் அன்னிய செலவாணி கிடைக்கிறது இந்தியாவில் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் இது 5% ஆகும். இந்திய கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து நிலப்பரப்பில் இருந்து 12 கடல் மைல் வரையிலான மைல் தொலைவு வரை மட்டுமே பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியும் மற்ற பகுதிகளில் அயல்நாட்டு கப்பல்கள் மீன்பிடிக்க சட்டம் வழிவகை செய்கிறது அதேபோல மீனவர்கள் அதற்குரிய உரிமைகளை பெற்று குறிப்பிட்ட தொகையினை செலுத்தி மீன் பிடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடும் பாதிப்பு உள்ளவர்கள். எனவே இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இத்தகையை கோரிக்கையை வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு சார்பில் ஏராளமான மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூண்டில் வளைவு ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்த நிலையில் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
