• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னைக்குள் தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

ByA.Tamilselvan

Oct 20, 2022

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளை அடிக்க திருடர்கள் சென்னை நகருக்கு ஊடுவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ‘பிக்பாக்கெட்’ மற்றும் ‘செயின்’ பறிப்பு கொள்ளையர்கள் ஒருசில இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் சிறுமி ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதேபோன்று வணிக பகுதிகள் பலவற்றிலும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.