• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சீட்டு விளையாடிய 14 பேர் கைது 10 லட்சம் ரூபாய் பறிமுதல்..,

Byமுகமதி

Dec 29, 2025

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் ஆர் எஸ் பதி காட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 14 பேரை கைது செய்து.. அவர்களிடம் இருந்து 10,09,670 ரூபாய் ரொக்கப் பணமும் 18 செல்போன்கள்..17 இருசக்கர வாகனங்களை அறந்தாங்கி போலீசார் பறிமுதல் செய்தனர்.

அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிராதமாக சீட்டு விளையாடுதல் போன்ற செயல்கள் நடைபெற்று வருவதாக அறந்தாங்கி டிஎஸ்பி சரவணன்.. அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அறந்தாங்கி போலீசார் மறமடக்கி பகுதியில் ஆய்வு செய்த போது, அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் ஆர் எஸ் பதி காட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் கட்டுக் கட்டாக பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய போது அதிரடியாக அங்கு புகுந்த அறந்தாங்கி போலீசார் சீட்டு விளையாடிய 14 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10,09,670 ரொக்கம் மற்றும்18 செல்போன்கள்..17 இருசக்கர வாகனங்களை அறந்தாங்கி போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து 14 பேரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.