• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தொகுதியில்இறுதி வேட்பாளர் பட்டியல்14 பேர் போட்டி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு நேற்று 9 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மனு தாக்கல் செய்தவர்கள் யாரும் திரும்பப் பெற வரவில்லை.

அதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் தவிர்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சண்முக வடிவேல் சின்னங்கள் ஒதுக்கினார். அதன் பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு :-
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.நாம் தமிழர் -நாகலட்சுமி – கலப்பை தூக்கும் விவசாயி.
2.அ.தி.மு.க. – மாணிக்கம், -இரட்டை இலை
3.தி.மு.க. – வெங்கடேசன், -உதயசூரியன்
4.த. வெ.க. – கருப்பையா – விசில்
5.வாழ்வுரிமைக் கட்சி
– தங்கப்பாண்டி. கேமரா
6.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள்முன்னேற்ற கழகம் -டாக்டர் க. பாலமுருகன். தென்னந்தோப்பு
7.புதிய தமிழகம் – ரகு (சுயே),- கேஸ் சிலிண்டர்
8.ராமதாஸ் இந்து திராவிட மக்கள் கட்சி -கிணறு
9.அஜய் சுபாஷ். (சுயே)-ஏர் கூலர்
10.கிருஷ்ணசாமி (சுயே)-பீரோ
11.குணசேகரன் (சுயே)-பேட்

  1. ச. பாலமுருகன் (சுயே)-குழந்தை நடை பயிற்சி வண்டி
    13.ரா. பாலமுருகன் (சுயே)-பலூன்
    14.ரஞ்சித்குமார் (சுயே)-தொலைக்காட்சி பெட்டி. ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டு போட்டியிடுகின்றனர்.
    உடன் உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் இருந்தனர்.