

ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது.
அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்தவும் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு உதவ எந்த நாடுகளும் இல்லை’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

