

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் வாடகை கார் ஓட்டுனர்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே நாட்டுச் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திய மூர்த்தி. கோயமுத்தூரில் வாடகை கார் ஓட்டுனரான இவர் திருவள்ளுவர் மீது கொண்ட பற்றால் திருக்குறளில் உள்ள குறட்பாக்களையும் தலைகீழாக எழுதிப் பழகி உள்ளார் .இதனை அறிந்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும், வள்ளுவர் பேரவையும் இணைந்து இவரது சாதனையை ஊக்குவிக்க முன் வந்ததையடுத்து நேற்று 11 25 மணி அளவில் குறட்பாக்களை தலைகீழாக எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 17 மணிநேரம் 19 நிமிடங்களில் 1330 குறட்பாக்களையும் எழுதி முடித்தார். இந்த சாதனையை வள்ளுவர் பேரவை நிர்வாகிகள் முடித்து வைத்தனர்.
சாதனை புரிந்த கார்த்திய மூர்த்திக்கு உலக சாதனை விருதுக்கான சான்றிதழை, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் வழங்கியது.
