• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மக்கள் பயன்பாட்டில் 1,150 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்கள்

Byமதி

Nov 10, 2021

தமிழகம் முழுவதும் 1,150 நடமாடும் மருத்துவ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அயப்பாக்கம் மருத்துவ ஆரய்ச்சி நிறுவனத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பயன் பெறும் வகையில் 1,150 நடமாடும் மருத்துவ வாகன சேவையை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து துவக்கிவைத்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நல திட்டத்தையும் வழங்கினார்.

மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இந்த சேவை செயல்படும் எனவும், தேவைப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி அனுப்பி வைக்கப்பட்டு சேவை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,858 மருத்துவ முகாம் நடத்தபட்டு, 965 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

வடசென்னையில் மழை நீர் தேங்கி நிற்க்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மழை காலங்களில் முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ள மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1303 அவசர சிகிச்சை ஊர்திகள் தயார் நிலையில் இருக்கிறது” என தெரிவித்தார்.