

நடப்பு கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்வருடன் கலந்து ஆலோசித்தபின் விரைவில் தேர்வு அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 5 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 2-ம் வாரத்தில் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!