திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். அரிட்டநேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என்று கூறப்படும் வடக்கிருந்து நோன்பு நோற்று உயிர்நீத்த இடம் என்பதைக் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது’ என்பது இக்கல்வெட்டின் பாடம். முன் இரண்டு வரிகளில் தொடக்கம் சேதம் அடைந்துள்ளதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என்பதை அறிய முடியவில்லை நாற்பது அல்லது ஐம்பது என்று நாட்கள் இருக்கலாம் முன்னெழுத்துக்கள் இல்லாமல் பது என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் இருப்பதால் 20 முதல் 80 வரையான நாட்களை குறிக்கலாம். நிசிதிகை என்ற சொல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. பாண்டியநாட்டில் இச்சொல் கல்வெட்டுகளில் இதுவரை இடம் பெற்றதில்லை. தொண்டைமண்டலம் (திருநாதர்குன்று) கொங்குமண்டலம் (விசயமங்கலம்) ஆகிய ஊர்களில் இப்படிப்பட்ட நிசிதிகை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாண்டியநாட்டில் இதுவே முதலாவதாக அறியப்பட்டுள்ளது.
செஞ்சிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று மலையில் ஜம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சந்திரநந்தி எனும் துறவியின் நிசிதிகை உள்ளது. அதன் காலம் கி.பி 6ஆம் நூற்றாண்டாகும்
திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலேயே முக்கிய சமணத்தளமாக விளங்கியுள்ளது. மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. முதல்நூற்றாண்டைச் சேர்ந்தவை இங்கு காணப்படுகின்றன. அதற்கு அடுத்து கி.பி. 8 – 9 ம் நூற்றாண்டில் தென்பரங்குன்றம் குடைவரைக்கோயில் சமணத்தீர்த்தங்கரர்க்காக எடுக்கப்பட்டது. பின்னர் கி.பி. 13ம் நூற்றாண்டில் அது சிவன்கோவிலாக மாற்றம் பெற்றது. மதுரைக்கு அருகில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்த எண்பெருங்குன்றங்களில் திருப்பரங்குன்றம் முதலாவதாகும். மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோயில் அருகில் மலைப்பாறையில் கி.பி. 9 –10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவியரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மலை அடிவாரத்தில் உள்ள பழனிஆண்டவர் கோயிலின் பின்புறம் ஒர் இயற்கையான சுனைக்கு அருகில் இரண்டு பார்ச்சுவநாதர், மகாவீரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன.
இவ்வளவு சமணத்தொடர்புடைய திருப்பரங்குன்றத்தில் முதல்முறையாக நோன்பிருந்து உயிர்நீத்த அரிட்டநேமிப்பெரியார் பற்றிய கல்வெட்டு கிடைத்திருப்பது முக்கியத்துவம்வாய்ந்ததாகும். மதுரைக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி என்னும் சமணத்தலம் அரிட்டநேமிப் பெரியாரின் பெயரில் அமைந்தது என்பர். இவரே அப்பெயருக்குக் காரணமானவராக இருக்கலாம்.
தமிழகத்தில் சங்ககாலத்திலேயே வடக்கிருந்து உயிர் போக்கும் வழக்கம் இருந்தது என்பதனை கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் பத்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்பரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது. இக்கல்வெட்டை வாசித்து இவ்விளக்கத்தை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.
இக்கல்வெட்டு உள்ள இடத்தில் ஒரு துறவியர் மடம் இருந்ததற்கான கட்டுமானத் தடயங்களும் காணப்படுகின்றன. உடைந்த செங்கல்துண்டுகள், சிதைந்த கட்டிடப்பகுதிகள், பானைஓடுகள் இங்கு இருப்பது கொண்டு இம்முடிவுக்கு வரலாம் என்றார் அவர்.
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்