• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இம்மாதம் இறுதிக்குள் பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம் அறிவிப்பு ?

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் பொதுத் தேர்தலின்போது, திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும்தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கிடைத்த தகவலின் படி தற்போது 4 ஆம் தேதி மறைமுக தேர்தலுக்கு பின்னர் 5 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் கூட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்ச்18 ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி அப்போது குடும்பத் தலைவிகளுக்காக வழங்கப்படும்உரிமைத் தொகைஆயிரம் ரூபாய் அறிவிப்பும் வெளியிட முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்ப அட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா? ஆம் எனில் பிபிஎல் பட்டியல் எண் ஆகியவை கோரப்பட்டுள்ளது. அதன் கீழ், குடும்ப அட்டைதாரர் விவரம் குறிப்பிடப்பட்டு, ரூ.1000 பெற தகுதி பெறுகிறாரா, இல்லையா என்று விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றளிப்பவர் கையொப்பமிடும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது.