வீடியோக்களை அடிப்படியாக கொண்டு இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஐஜிடிவி சேவையை கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த சேவையை நிறுத்தி, ஐஜிடிவியை தனி செயலியாக மாற்றியது.
இந்நிலையில் தற்போது ஐஜிடிவி சேவையை முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஐஜிடிவியில் வழங்கப்பட்டு வந்த அனைத்து அம்சங்களும், வீடியோ சேவைகளும் இனி இன்ஸ்டாகிராம் செயலியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.மேலும் தற்போது உள்ள இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறும் வகையிலும் இன்ஸ்டாகிராம் மாற்றம் செய்து வருகிறது. இதன்மூலம் வீடியோ கிரியேட்டர்கள் ரீல்ஸ் மூலம் வருமானமும் பெறலாம் என கூறியுள்ளது.இணையவாசிகள் தற்போது அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதிலேயே நேரம் செலவிட்டு வருவதால், தனியாக இயங்கும் ஐஜிடிவி சேவையை நிறுத்தி, இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோ அம்சத்தை மேம்படுத்தும் வேலையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.