• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஒரே நாள் மழையில் நிரம்பிய 100 ஏரிகள்

Byமதி

Nov 20, 2021

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள 16 ஏரிகளும், திருவண்ணாமலையில் 82 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 338 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 489 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளன.

திருவண்ணாமலை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 819 ஏரிகள் 100% தன் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையில் ஒரே நாளில் மட்டும் 100 ஏரிகள் கூடுதலாக 100% தன் முழு கொள்ளளவை எட்டி, தற்போது 919 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 97 ஏரிகள் 75 சதவிகிதமும், 6 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மொத்த 93 ஏரிகளில், 82 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும், நிரம்பியுள்ளன. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த உள்ள 16 ஏரிகளும் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 381. அதில் 338 ஏரிகள் 100 சதவிகிதமும், 38 ஏரிகள் 75 சதவிகிதமும், 5 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 528 ஏரிகளில் 480 ஏரிகள் 100 சதவிகிதமும், 47 ஏரிகள் 75 சதவிகிதமும், 1 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.