• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்த நிறைமாத கர்ப்பிணி!

Byகுமார்

Feb 4, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின், கடைசி நாளான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களில் திமுக,அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் மும்மரமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 75 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள நிறைமாத கர்ப்பிணி பெண்ணான உமையாள், இன்று மாநகராட்சி மண்டலம் எண் 4ல் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.