டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள அரசுத் தரப்பில் இருந்து இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக, உக்ரைனில் உள்ள கேரள மாணவர்களை பாதுகாப்பாக மீட்கக்கோரி முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மாநில பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.