வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட இருவரை கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைபுதூர் பாலத்தில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கேரளாவை சேர்ந்த விபின் தான் 29 கரைபுதூர் பகுதியைச் சேர்ந்த நவீன் ஆனந்த் 29 என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் திருப்பூர் மற்றும் பல்லடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
