• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சமயநல்லூர் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.300 கிலோ கஞ்சா பறிமுதல்..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2026

மதுரை மாவட்டம் முழுவதும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார், மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமயநல்லூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதிக்க வைக்கப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.300 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கோச்சடை நடராஜ் நகரைச் சேர்ந்த தீனதயாளன், சாந்தி நகரை சேர்ந்த ஹரிஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர், கஞ்சா, செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை தனிப்படை காவல்துறையினர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சமயநல்லூர் போலீசார் இருவர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்து மேலும்விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.