• Thu. Mar 28th, 2024

மதுரை மாநகரில் 3 டன் அளவிலான போலி சிகரெட் பறிமுதல் : போலிஸ் விசாரணை.!!

Byadmin

Jul 30, 2021

தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில் ஐந்திற்க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை மாநகர் பகுதிகளில் முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் ஆறாவது தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு கிடைத்த ரகசியத்தகவலை தொடர்ந்து குடோனுக்கு சென்ற காவல்துறையினர் பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது சுமார் 1200க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் சுமார் 3 டன் அளவு மதிப்புள்ள இந்திய புகையிலை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத போலியான சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலி சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் குடோன் கண்காணிப்பாளர் பிரபுவை கைது செய்து விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடோனின் உரிமையாளர் பன்னீர் செல்வம் சட்டவிரோதமாக தென் மாவட்டங்களுக்கு சாக்லேட் பாக்ட்டுகள் விற்பனை செய்வது போன்று புகையிலை மற்றும் போலி சிகரெட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். மேலும் குடோனை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றிய விளக்குத்தூண் உதவி ஆணையர் சூரக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டி, மற்றும் தனிப்படை காவல்துறையினர் மணிமாறன், சரவணன், பிரபு ஆகியோரை மாநகர காவல்துறை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வெகுவாக பாராட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *