• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேங்காய்பால் புலாவ்:

Byவிஷா

Jul 20, 2022

தேவையான பொருட்கள்

அரிசி – 250 கிராம் (1 கப்), தேங்காய் துருவல் – 1 கோப்பை, பெரிய வெங்காயம்- 1, லவங்கம் – 5, பட்டை – 2 (1 இஞ்ச் அளவு), ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, தயிர் – 3 தேக்கரண்டி, புதினா – சிறிதளவு, கறிவேப்பிலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது), கொத்தமல்லி – 1 தேக்கரண்டி (நறுக்கியது), நெய் – 3 தேக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு

செய்முறை
அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவலை மிக்ஸியில் மைய அரைத்து இருமுறை பால் எடுத்துக் கொள்ளவும். (1 கப் அரிசிக்கு 3 கப் பால்) குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். அதனுடன் புதினா, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் தயிரைச் சேர்த்து, ஒரு பிரட்டு பிரட்டியதும் உடனே தேங்காய்ப் பாலை சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும், ஊற வைத்து வடிகட்டிய அரிசியை சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரில் ஆவி அடங்கியதும் சாதம் குலையாதவாறு லேசாகக் கிளறி பரிமாறவும்.