• Wed. Apr 24th, 2024

குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல். பாளையம் கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு..

Byadmin

Jul 26, 2021

குமரி மாவட்டம் அருமனையில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யபட்ட நிலையில் தலைமறைவானவரை விருதுநகர் மாவட்ட த்தில் தனிபடையினரால் கைது ,குழித்துறை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு 15நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கபட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ,இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்பாட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் ,பாரததாயை அவமதித்தும் பிரதமர்,உள்துறை அமைச்சர்,மாநில அமைச்சர்கள் குமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இழிவுபடுத்தியும் மதகலவரத்தை தூண்டும் நோக்கிலும் உரையாற்றினார் இதையடுத்து தமிழகம் முழுவதும் மதபோதகரின் பேச்சிற்கு கண்டனம் எழுந்தது மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர் இதேபோல் குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர் தலைமையில் இவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கபட்டது இந்நிலையில் சர்சைக்குரிய வகையில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மற்றும் அருமனை ஸ்டீபன் மீது 7பிரிவுகளின் கீழ் அருமனை காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யபட்டது இதையடுத்து கைதிற்கு பயந்து தலைமறைவான மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கபட்டு தேடிவந்தநிலையில் இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் கள்ளிபட்டியில் தனிப்படையினரால் கைது செய்யபட்டார் அதைதொடர்ந்து அவரை குமரி மாவட்ட அழைத்து வந்த காவல்துறையினர் குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை மேற்கொண்டு குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டார் அதையடுத்து அவருக்கு 15நாட்கள் நீதிமன்ற காவலுக்கு குற்றவியல் நீதிபதி செல்வம் உத்தரவிட்டார் இதையடுத்து சிறையிலடைக்கபட்டார்

மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யபட்டதையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடபட்டிருந்தது இதேபோல் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் குழித்துறை நீதிமன்ற முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *