மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரத்தில் அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மகாலில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் நிறுவன தலைவர் கேப்டன் ராஜா தலைமை வகித்தார். மதுரை மாவட்ட நிர்வாகிகள் மோகன்யாதவ், சுரேஷ்யாதவ், பழனிமுருகன்யாதவ், சரவணன்யாதவ். பாலமுருகன், பொண்ணூரான் மற்றும் அழகுமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை, சிவகங்கை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அகில இந்திய யாதவர் பாதுகாப்புப் பேரவையின் நிறுவன தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழா உரையில் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பெயரை உச்சரிக்காமல் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன், ஈவேரா. பெரியார் பெயரினை உச்சரித்து யாதவ சமுதாயத்தினரை அவமதிக்கும் செயல். யாதவ மாமன்னர் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை குறிப்பிடாமல் சுதந்திர தின உரையில் மறைத்துள்ளார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். யாதவர் சமுதாயத்தை முதல்வர் புறக்கணித்தால் வர இருக்கின்ற மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் யாதவர் மக்கள் தமிழக முதல்வருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.