
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வினோதன் உத்தரவின் பேரில் கொரானா விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. மலைகளின் இளவரசியாக உள்ள கொடைக்கானலுக்கு கேரளா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். தங்களுக்கு கொரானா தொற்று இல்லை என்ற 72 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்ட சான்றிதழ்களையும் சில்வர் ஃபால்ஸ் அருகில் உள்ள டோல் கேட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள் மட்டுமே கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்
