• Fri. Mar 29th, 2024

மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பாராளு மன்றத்தில் தகவல் தர மறுக்கிறார்கள்.., கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் காரசாரமாக பேட்டி!…

By

Aug 7, 2021

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறுகையில் ,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ,குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் வெட்டி எடுத்து கடத்துவதை தடை செய்ய வேண்டும் , மக்களை பாதிக்காத வகையில் உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ,


விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டம் ,பெகாசஸ் விவகாரம் , மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அரசு விவாதம் செய்யவில்லை இது ஜனநாயகதிற்கு விரோதமானது ,
பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி செல்போனை ஓட்டுகேட்பது என்பது சாதாரண விஷயம் இல்லை இது குறித்த விவாதிக்க மறுக்கிறார்கள் இது தொடர்பாக தகவல் தர மறுப்பதன்  மூலம் அவர்கள்  பக்கம் தவறு இருப்பதை ஒற்றுக் கொள்கிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *