நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட காட்டுக்கொட்டாய் பகுதி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம். இந்த கிராமத்தில் ஆஸ்பட்டாஸ் போட்ட ஒரு தோட்டத்து வீட்டில் தான் மிக திறமை மிக்க 3 கபாடி விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திறமையை மாவட்ட நிர்வாகம் வெளிக்கொணர வில்லை. வீட்டுக்குள் நுழைந்தால் நம்மை 8 அடி உயர வெற்றிக் கோப்பைகள் தான் நம்மை வரவேற்கின்றன. -ஸ்ரீதர் பரமே;மணிகண்டன் ஆகிய 3 சகோதரர்களின் வீடு தான் அது. . தமிழர்களின் வீர விளையாட்டு கபடி. இந்த விளையாட்டில் உலக அளவில வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட சென்று கபடி விளையாட்டைக் கற்றுக்கொண்ட அண்ணன் ஸ்ரீதர் தனது இரண்டு தம்பிகளான மணிகண்டன் பரமே; ஆகியோருக்கும் கற்றுத் தந்தார். இப்போதும் முறையான பயிற்சியாளர் இல்லாமல் ஏகலைவன்களாக தாங்களே பயிற்சி பெற்றுக்கொண்டார்கள். இப்போது அதில் நிபுனத்துவமும் பெற்றுவிட்டார்கள். போட்டிகளில் வென்ற நூற்றுக்கும் மேற்பட்ட கோப்பைகளை வைப்பதற்காகவே குடிசை வீட்டை மாற்றி வேறு வீட்டுக்கு சென்று உள்ளார்கள். ஆனால் பரிதாபம் அந்த வீட்;டில் கூட இந்த கோப்பைகளை வைக்க இடமில்லை. இப்போது போலீஸ் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தம்பி பரமேஷ் அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார்.
ஒரு விளையாட்டில் பெற்ற மெடலை வைத்து ஒரு படமே எடுக்கிறார்கள். வீடுகள் முழுக்க பரிசுப்பொருட்களை வென்று குவித்திருக்கிற இந்த இளைஞர்களை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையான ஒன்று. இவர்கள் அருகே ராசிபுரம் சுற்றுலாத்துறைஅமைச்சர் மதிவேந்தன் குடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கபடி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று கபடி கபடி என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் இவர்கள் வீட்டில் வறுமையும் கபடி கபடி என்று பாடுகிறது. இதன் காரணமாக அண்ணன் ஸ்ரீதர் வேலைக்கு சென்றுகொண்டு தம்பிகளை விளையாட்டில் முழுமையாக ஈடுபடுத்துகிறார். இன்றைக்கு கபடி விளையாட்டு சர்வதேச விளையாட்டாக அதுவும் கிரிக்கெட் போல கார்ப்பரேட் விளையாட்டாக மாறி உள்ள சூழலில் இது போன்ற கபடி விளையாட்டு வீரர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். தகுதிக்கும் திறமைக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று வாதிடுவோர் எப்படி இந்த இளைஞர்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஒலிம்பிக் வீரர்களுக்கு 3 கோடி வரை அறிவிக்கும் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற திறமை மிக்க வீரர்களை வறுமையிலிருந்து மீட்டு உலகுக்கு அறிமுகம் செய்வாரா? என்பதே நமது கேள்வி..