
தேவகோட்டை அருகே சான்றிதழ் கொடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வைரல் வீடியோவை அடுத்துகிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சண்முகநாதபட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டி.விவசாயியான இவர் தனது நிலத்திற்கு கிராம கணக்கில் ஏ1 பதிவேட்டிலிருந்து நகல் எடுத்து தருமாறு செம்பொன்மாரி கிராம நிர்வாக அலுவலர் கோபி கண்ணனனிடம் கேட்டுள்ளார். அதற்கு கோபிகண்ணன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணம் கொடுக்கும் காட்சியை பாண்டி தனது நண்பர் மூலம் செல்போனில் வீடியோவாக படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் செம்பொன்மாரி கிராம நிர்வாக அலுவலர் கோபி கண்ணனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டதோடு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளார்.சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏயுழு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
