
ஒரு டன் ரேஷன் அரிசி ஆட்டோவில் கடத்தல். தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்.
கோவை. ஜூலை. 15- கோவை மாநகரில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று உக்கடம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அந்த ஆட்டோவில் சிறிய மூட்டைகளாக ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. அவை கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து கோவை பகுதியைச் சேர்ந்த தவமணி வயது 48, என்பவர் கைது செய்யப்பட்டார். ஒரு டன் ரேஷன் அரிசியை அறிமுகம் செய்யப்பட்டது. கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். கடத்தலை தடுப்பதற்காக தொடர்ந்து போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
