ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை யோகா இயற்கை மருத்துவ துறையின் சார்பில் நோய் எதிர்ப்பாற்றலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பானம் இலவசமாக வழங்கப்பட்டன.
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என்பது இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறை மருத்துவம் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு எளிய இயற்கையான சிகிச்சை அளிப்பது இயற்கை மருத்துவம் மேலும் பக்க விளைவுகள் இல்லாத சிக்கனமான மற்றும் முழுமையான மருத்துவமாகும்.
மூட்டுவலி தலைவலி கழுத்துவலி இடுப்பு வலி முடக்குவாதம் உடல் பருமன் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு வயிற்றுப்புண் மலச்சிக்கல் ஜீரண கோளாறு தோல் வியாதிகள் ஆஸ்துமா சைனஸ் பிரச்சனை மனநலப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சிறந்த முறையில் நிவாரணம் தருகிறது ஐந்து வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுரு யோகா இயற்கை மருத்துவர் ஜெயின் ராஜ் கிராம நிர்வாக அலுவலர் ஜெகன்நாத பூபதி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.