

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன் ஒன்றை தொடங்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”சென்னையில் உள்ள ரவுடிகளை இரண்டு வகைகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஏரியா வாரியாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு எந்தவிதமான ரவுடிகள் உள்ளனர் என்பதை பொறுத்து அவர்களுக்குள் பிரச்சனை செய்துகொள்பவர்கள், அதேபோல் பொதுமக்களிடம் பிரச்சனை செய்பவர்கள் என ரவுடிகளை இரண்டு வகைகளாகப் பிரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

