
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் படகுக்கு தேவையான மானிய விலை மண்ணெண்யை வாங்க 7 கிமீ தூரம் சென்று வாங்க வேண்டிய நிலை இருப்பதால் தாங்கள் வசிக்கும் அப்பகுதியில் வைத்தே மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் சுமார் 85 க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார்கள். இவர்களின் நாட்டு படகிற்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த மானிய விலை மண்ணெண்ணெய் ஆரோகியபுரத்தில் இருந்து சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ள சின்ன முட்டம் பகுதியில் வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருவதால் மீனவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் 7 கிமீ தூரம் சென்று மண்ணெண்ணெய் வாங்கி வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருவதோடு சில நேரங்களில் மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றதுடன் திரும்பி வருவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டு மீனவர்களின் நலன் கருதி ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்திலேயே மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகம் செய்து மீனவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மீனவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.