

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
சிவகங்கை மாவட்டம் பகைவரைவென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மலேசியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலையின்றி சொந்த ஊருக்கு திரும்புவதற்காக கடந்த 20 ஆம் தேதி மலேசியா விமான நிலையம் வரை வந்துள்ளார். இரண்டு நாட்களுக்களாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் 22 ஆம் தேதியன்று கணவருடன் பணியாற்றும் ஒருவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் மலேசியா விமான நிலையம் உள்ளே வரை வந்ததாகவும், திடீரேன அவர் காணமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன ஜெயக்குமாரின் மனைவி கவிதா, காணமல் போன தனது கணவரை கண்டுபிடிக்கக்கோரி இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மனு அளித்தார்.

