நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் கொரோனா வார்டு அருகே தீ விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் கொரோனா வார்டின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்த நோயாளிகள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.அதற்குள் புகை அருகே இந்த கொரோனா தொற்று வார்டில் பரவியதால், சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகள் திகைத்தனர். புகை மண்டலம் சூழ்ந்ததையடுத்து உயிரைகாப்பாற்ற அங்கும் இங்குமாக தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு வெளியே ஓடினர். ஒரே நேரத்தில் ஏராளமான நோயாளிகள் வெளியேற்றுவதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சுமார் அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.தீவிபத்துபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அரவிந்த் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.