கிருஷ்ணகிரி அருகே உள்ள போச்சம்பள்ளி வனத்தை ஒட்டிய தோட்டங்களிலும், வீடுகளிலும் மயில்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இவை அருகில் உள்ள முட்புதருகளில் முட்டைகள் ஈடுகின்றன. பெரும்பாலான முட்டைகளை சில குறும்புக்கார சிறுவர்கள் எடுத்து சென்று விடுகின்றன.
இதேபோல் சிப்காட் வளாக கிணற்றில் உள்ள முட்டைகளை எடுக்க சில சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது மயில்கள் சிறுவர்களை பார்த்ததும் விரட்டியடிக்க, மயில்களின் தாக்குதலுக்கு தப்பித்து ஓடிய சிறுவர்கள் செளந்தர் மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் தவறி கிணற்றில் விழுந்தனர்.
செளந்த்ருக்கு நீச்சல் தெரியாததால் சுதாகர் சத்தம் போட்டுள்ளான். சத்தம் கேட்டதும் ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த தீயனைப்பு துரையினர் சுதாகரை உயிருடன் மீட்டனர். செளந்தர் தண்ணீருக்குள் மூழ்கி விட்டதால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போராடி பிணமாக மீட்டனர். இச்சம்பவத்தால் சுற்று வட்டார பகுதினர் சோகத்தில் முழ்கினர்.