• Fri. Apr 18th, 2025

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

Byadmin

Aug 5, 2021

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது – இந்த திருவிழாவின் போது ஆட்சி மீனாட்சியிடமிருந்து சிவபெருமானுக்கு வழங்கப்படும்

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை திருவிழாவும், ஆவணி மூலத்திருவிழாவும் பிரசிதிபெற்றதாகும்.

சித்திரை திருவிழாவின் போது மீனாட்சிக்கு பட்டாபிஷேக நிகழ்த்தி ஆட்சி செய்து வந்த நிலையில் ஆவணி மூல திருவிழாவின்போது மீனாட்சியிடம் இருந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பு சிவபெருமானிடம் வருவது ஐதிகம்.

அதனடிப்படையில் இந்த ஆவணி மூலத்திருவிழாவின் போது மதுரையில் வீற்றிருந்து அருள்பாலிக்க கூடிய சுந்தரேஸ்வரருக்கு ஆட்சி வழங்கப்படும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் ஆவணி மூலத்திருவிழா காலை 10.45 மணிக்கு மேல் 11.20க்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

மேலும் 20ஆம் தேதி வரை 15நாட்கள் உள் திருவிழாவாக நடைபெறவுள்ள இந்த ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் சிவபெருமான் விறகு விற்றது, நரியை பரியாக்கியது, மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் வழங்கியது, பிட்டுக்கு மண் சுமந்த லீலை போன்ற 10 திருவிளையாடல்களின் லீலைகள் வெகுவிமர்சையாக நடைபெறும்.

ஆவணித்திருவிழாவின் போது தினசரி சுவாமியும் , அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உட் பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்வுகள் நடைபெறும்.

கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஆவணி மூலத்திருவிழாவின் திருவிளையாடல் லீலைகள் மற்றும் வீதி உலாக்கள் கோவிலின் உட்புற ஆடி வீதியில் நடைபெறும் எனவும்,திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.